Valmiki Ramayana in Tamil

சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும்? காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வாக்களித்தேன். எனவே உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்கை காப்பேன்.” என்று பதில் கூறுகிறார்.

ரிஷிகளோடு பத்து வருடங்கள்
ரிஷிகளோடு பத்து வருடங்கள்
Read More

ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார். ராமர் வாசல் வழியே வந்தும் மாண்டகர்னி முனிவர் மதன பரவசத்தால் ராமரை தரிசிக்க முடியவில்லை.

Source :

View more

You might also like More from author

1 Comment

Leave A Reply

Your email address will not be published.